Sunday, September 12, 2010

கூடு சுமந்தலையும் நத்தைகள்













முதுகில் கூடுகள் சுமந்து
அலைகின்றன நத்தைகள்
கிழமேலாக 
மற்றும் 
தென் வடலாக
 
ஈருறுப்பு தாங்கியும்
இன்னோருறுப்பு 
ஏங்கி அலைவன
நத்தைகள் 

ஜனித்ததும்
தன் கூடு தின்னும் 
சாத்திரம் அறிந்தவை
நத்தைகள்

குத்திக் கிழிக்கும்
கூர்முனையிலும் 
தவழ்ந்து செல்லும் 
நத்தைகள்

எவர் பேச்சும் கேட்காது
தன் போக்கில் போகும்
காதுகளற்ற நத்தைகள்
சொல்லிச் செல்கின்றன
வாழ்க்கையை
வெகு எளிதாக