Sunday, September 12, 2010

கூடு சுமந்தலையும் நத்தைகள்













முதுகில் கூடுகள் சுமந்து
அலைகின்றன நத்தைகள்
கிழமேலாக 
மற்றும் 
தென் வடலாக
 
ஈருறுப்பு தாங்கியும்
இன்னோருறுப்பு 
ஏங்கி அலைவன
நத்தைகள் 

ஜனித்ததும்
தன் கூடு தின்னும் 
சாத்திரம் அறிந்தவை
நத்தைகள்

குத்திக் கிழிக்கும்
கூர்முனையிலும் 
தவழ்ந்து செல்லும் 
நத்தைகள்

எவர் பேச்சும் கேட்காது
தன் போக்கில் போகும்
காதுகளற்ற நத்தைகள்
சொல்லிச் செல்கின்றன
வாழ்க்கையை
வெகு எளிதாக





Sunday, August 15, 2010

பயோ டேட்டா

பிறரைப் பற்றி பயோ டேட்டா எழுதிப் பயமுறுத்தல்தான் பதிவுலகில் அதிகம். என்றாலும் என்னைப் பற்றி நானே எழுதிய சிறு குறிப்பு இது.




பெயர் : எழுத்தாளர் பைரவன்

இயற்பெயர் : writer bairavan

வயது : திருமணம் செய்யும் வயது கடந்துவிட்டது

தொழில் : மன்னார் & கம்பெனி மேனேஜர் 

உப தொழில் : எழுதுவது (பிளாக், ட்விட்டர், பஸ்)

பிடித்தது :  பிறர் எழுத்தைப் படிக்க

பிடிக்காதது : என் எழுத்தைப் படிக்க 

சமீப சாதனை : பிளாக் தொடங்கியது

நீண்ட கால சாதனை : இது வரை பிளாக் தொடங்காமல் இருந்தது.

ஆசை : நன்றாக எழுத

நிராசை : அப்படி எழுத முடியாமலிருப்பது